உலகம்
இஸ்ரேல் பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்; வீதியில் இறங்கிய பொதுமக்கள்
காஸா பகுதியில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த ஆறு பணயக் கைதிகளை மீட்க தவறியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் இரண்டாவது நாளாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த ஆறு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கினர்.
பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவத்துடன் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இங்கிலாந்து நிறுத்தியுள்ளது.