முச்சந்தி

மலக்குடலில் தங்கம் கடத்திய 3 இலங்கையர்கள்: கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது

பெங்களூர் – கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) வைத்து சர்வதேச தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று இலங்கை பிரஜைகளை பெங்களூரு விமான சுங்க அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை(30) கைது செய்ததாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர்களான மூவரும் கொழும்பில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியவுடன் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் தங்களின் மலக்குடலில் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் குழு கண்டுபிடித்ததாக தி இந்து இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,670.92 கிராம் எனவும் இதன் மதிப்பு சுமார் 11.9 மில்லியன் இந்திய ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மூவரும் தங்க கடத்தல் வலையமைப்பிற்கு இரகசியமான முறையில் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button