இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் குறைவு: பாடசாலைகளையும் மூடக் கூடிய அபாயம்

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் கடந்த ஐந்து வருடங்களாக கணிசமான அளவில் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டில் பதிவான குழந்தை பிறப்பு எண்ணிக்கையை விட 2023ஆம் ஆண்டில் பதிவான குழந்தை பிறப்பு எண்ணிக்கை 70,000ஆல் குறைவடைந்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவின் அறிக்கைகள் கூறுகின்றன.

நாடளாவிய ரீதியில் நிலவும் முன்பள்ளிகளை மூடும் நிலை வரையில் இது மாறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் சில வருடங்களுக்குள் பாடசாலைகளுக்குள் பிள்ளைகளை உள்வாங்கும் நிலை குறைவடைந்து, குறைவான பிள்ளைகள் உள்ள பாடசாலைகளை மூடும் நிலை ஏற்படலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 கிலோ மீட்டர் இடைப்பட்ட தூரத்தில் பாடசாலைகளை நிறுவும் திட்டம் எவ்வாறு இருந்தாலும் தற்போது காணப்படும் பாடசாலைகளை பாதுகாக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button