காசா பகுதியில் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பின் விசேட வேலைத்திட்டம்
ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை காசா பகுதியில் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலும் ஹமாஸும் தங்கள் 11 மாதப் போரில் சிறு இடைநிறுத்தம் செய்து பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த மாதம் ஒரு குழந்தை டைப் 2 போலியோ வைரஸால் பகுதியளவு முடங்கிவிட்டதை உறுதிப்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளில் இது முதல் தடவை எனவும் சுட்டிகாட்டப்பட்டது.
எட்டு மணிநேரம் போர் நிறுத்தப்படும்
மத்திய காசாவின் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரச்சாரம், வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கும் நகரும். தொடர்ந்து மூன்று நாட்களில் குறைந்தது எட்டு மணிநேரம் போர் நிறுத்தப்படும்.
இடைநிறுத்தங்கள் நான்காவது நாளுக்கு நீட்டிக்க வேண்டியிருக்கும் என்றும், முதல் சுற்று தடுப்பூசிகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது.
பாலஸ்தீனிய அதிகாரிகளின் கூற்றுப்படி,
குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய காஸா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள ஐ.நா-வால் நடத்தப்படும் மருத்துவ முகாமில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வர்.
மருத்துவ ஊழியர்கள் சொட்டு மருந்து பெற்ற குழந்தைகளை விரல்களில் பேனாவைக் கொண்டு குறித்துக்கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.