பலதும் பத்தும்
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை இத்தாலியைச் சேர்ந்த வோலண்டினா பெட்ரில்லோ பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகரில் ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
50 வயதான வோலண்டினா பெட்ரில்லோ பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீற்றம் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார்.
1980 ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலிய ஓட்டப்பந்தய வீரர் பியட்ரோ மென்னியா தங்கம் வென்றதைப் பார்த்து 07
வயதிலேயே தடகள விளையாட்டின் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டதாக பெட்ரில்லோ தெரிவித்தார்.
தன் வாழ்க்கையின் பெரும் பகுதியில் ஆணாக வாழ்ந்த வாலண்டினா பெட்ரில்லோ கடந்த 2017 ஆம் ஆண்டு ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு திருநங்கையாக மாறினார்.