உலகம்
ஜெலன்ஸ்கியை சந்தித்த மோடி: ரஷ்யா-உக்ரெய்ன் மோதல் குறித்து பேச்சுவார்த்தை
உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலன்ஸ்கியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு கெய்வில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடி உக்ரெய்னுக்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யா-உக்ரெய்ன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழிகளை மையமாகக் கொண்டு இரு தலைவர்களிடையே விரிவான கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இறுதியாக கடந்த ஜூன் மாதம் இத்தாலியின் அபுலியாவில் ஜி7 மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
இந்த சந்திப்பில், உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா இயன்ற அனைத்தையும் செய்யும் என மோடி ஜெலன்ஸ்கியிடம் கூறினார்.