வீட்டிலுள்ள கடிகாரம் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்; வாஸ்து கூறுவது என்ன?
நமது வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு வாஸ்து குறிப்புகளும் முக்கியம். அந்த வகையில் கடிகாரங்களை சுவற்றில் எப்படி மாட்டுவது? எந்த திசையில் மாட்ட வேண்டும்? எந்த நிறத்தில் மாட்ட வேண்டும் போன்றனவும் மிகவும் முக்கியம்.
கடிகாரத்தை சரியான திசையில் மாட்டாவிட்டால் நிதி நிலை மோசமாக மன அமைதி சீர்குலைந்துவிடும்.
எப்பொழுதுமே கடிகார நேரத்தை பின்னோக்கி ஓட விடக்கூடாது. அப்படி பின்னோக்கி ஓடினால் அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
சுவரில் மாட்டப்படும் கடிகாரங்கள் தெற்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும்போது வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது.
வடக்கு திசையில் வட்ட வடிவக் கடிகாரங்கள் மாட்டினால் இன்னும் கூடுதல் சிறப்பு.
கிழக்கு திசையில் ஊசல் கடிகாரங்கள் மாட்டலாம்.
படுக்கையறை கதவுக்கு நேர் மேலாக கடிகாரம் மாட்டக்கூடாது. வாசலுக்கு வெளியிலும் மாட்டக்கூடாது.
பால்கனி சுவரில் கடிகாரங்கள் மாட்டக் கூடாது. அதேபோல் வயதானவர்களுக்கு கடிகாரங்களை பரிசாகக் கொடுக்கக்கூடாது.
மஞ்சள், பச்சை, வெளிர் பழுப்பு நிறங்களில் கடிகாரங்கள் மாட்டுவது நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும்.
அடிக்கடி கடிகாரத்தை தூசி தட்ட வேண்டும். கடிகாரம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
கடிகாரம் உடைந்துவிட்டாலோ அல்லது பழுதடைந்துவிட்டாலோ வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல.

![]()