தீவிரமடையும் இஸ்ரேல் – பலஸ்தீனப் போர்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265 ஆக அதிகரிப்பு
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 10 மாதங்களுக்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது.
இப் போரில் அனேகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இப் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இதற்கான நிபந்தனை அறிக்கையையும் அமெரிக்கா தயாரித்தது.
ஆனாலும் நிபந்தனைகளுக்கு இரு தரப்பினரும் இணங்குவதாக தெரியவில்லை.
இன்று வரையில் போர் முடிவுக்கு வரவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, டேயிர் அல் – பாலா, கான் யூனிஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த நள்ளிரவு முதல் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 10 மாதமாக நடைபெற்று வரும் போரில் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 93,144பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.