மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்; செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
செங்கடலைக் கடக்கும்போது சரக்குக் கப்பல் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில் கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் நாட்டின் ஹுதைதா துறைமுகத்தில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் சிறிய படகுகளில் வந்தவர்கள் முதல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கப்பலுக்குள் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களா அல்லது ஏவுகணைகள் தாக்கினதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த தாக்குலில் உயிர்ச்சேதம் ஏதும் தெரியவில்லை. காசாவில் நடந்த இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை இஸ்ரேலுடன் தொடர்புடைய 80 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் நான்கு மாலுமிகள் கொல்லப்பட்டனர். தொடரும் தாக்குதல் இந்த வழியாக வர்த்தகத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள ஜூலான் மலைப்பகுதியில் ஹிஸ்புல்லாவின் பாரிய தாக்குதலின் போது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன.
அவற்றில் சில கட்டிடங்களைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது நடந்ததாக ஹிஸ்புல்லா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், லெபனானில் உள்ள சிடோனில் நடந்த தாக்குதலில் ஒரு ஃபதாத் தலைவரை இஸ்ரேல் கொன்றது. ஃபத்தா தலைமையை இஸ்ரேல் குறிவைப்பது இதுவே முதல் முறையாகும்.