உலகம்

ஈரான் ஜனாதிபதியின் மரணம்: இரு காரணங்கள் அடையாளம்

கடந்த மே மாதம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட ஹெலிகொப்டர் விபத்து மோசமான வானிலை மற்றும் விமானி, ஹெலிகொப்டரின் எடையைக் கையாள இயலாமையினால் ஏற்பட்டது என்று இறுதி விசாரணை முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி, குறித்த ஹெலிகொப்டர் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிக எடையை சுமந்து சென்றதாக கண்டறிந்தது.

இந்த முடிவுகள் கடந்த மே மாதம் ஈரானிய இராணுவத்தின் ஆரம்ப விசாரணையை உறுதிப்படுத்துகிறது.

“இப்ராஹிம் ரைசியின் ஹெலிகொப்டர் விபத்து தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது.

நடந்தது விபத்துதான் என்பதில் முழு உறுதி உள்ளது” என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கொள்காட்டி புதன்கிழமை ஃபார்ஸ் செய்தி கூறியது.

இரு காரணங்கள் அடையாளம்

முன்னாள் ஜனாதிபதி மட்டுமின்றி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனையும் கொன்ற விபத்துக்கான இரண்டு காரணங்களை அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.

முதல் காரணம் பாதகமான வானிலை. இரண்டாவது ஹெலிகாகொடரால் அது சுமந்துகொண்டிருந்த எடையைக் கையாள முடியவில்லை.

தகவல்களின்படி, ஹெலிகொப்டர் பாதுகாப்பு நெறிமுறைகள் கட்டளையிடும் திறனை விட இரண்டு பேரை மேலதிகமாக ஏற்றிச் சென்றது.

ஈரானிய இராணுவ விசாரணை

முன்னதாக கடந்த மே மாதம், ஈரானிய இராணுவம், அதன் ஆரம்ப விசாரணையில், ஹெலிகொப்டர் இடிபாடுகளில் “புல்லட் ஓட்டைகள்” இருந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று கண்டறிந்தது.

கண்காணிப்புக் கோபுரத்திற்கும் விமானக் குழுவினருக்கும் இடையேயான தகவல்தொடர்புகளின் போது சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கம் எதுவும் காணப்படவில்லை,” என்று அது மேலும் கூறியது.

விபத்துக்கு முன்னதாக ஜனாதிபதி ரைசி, அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் இணைந்து அணைக்கட்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.