யூடியூப் பக்கத்தில் இணைந்தார் ரொனால்டோ: வெறும் 90 நிமிடங்களில் நிகழ்த்திய உலக சாதனை

யூடியூப் பக்கத்தில் மிக வேகமாக ஒரு மில்லியன் சந்தாதாரர்களை (subscribe) இணைத்து பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைப் படைத்துள்ளார்.

புகழ்பெற்ற போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூடியூப் பக்கத்தை கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை தொடங்கினார்.

இந்நிலையில், வெறும் 90 நிமிடங்களில் ஒரு மில்லியன் பேர் அவரது யூடியூப் பக்கத்தில் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், ரொனால்டோவின் யூடியூப் பக்கம் தொடங்கப்பட்ட ஒரு நாளில் இப்போது 11 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் குறித்து ரொனால்டோ சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.

ரொனால்டோவை X தளத்தில் 112.5 மில்லியன் பின்தொடர்பவர்களும், பேஸ்புக்கில் 170 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளனர்.

சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ தற்போது சவுதி புரோ லீக்கில் அல் நாசருக்கு விளையாடுகிறார். 39 வயதான அவர் தொடர்ந்தும் விளையாடி வருகின்றார்.

எவ்வாறாயினும், விளையாட்டு வாழ்கையில் இருந்து ஓய்வுபெறும் அவர் தனது வணிக நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button