ஈரானில் நடந்த கோர விபத்து; பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் 35 பேர் உயிரிழப்பு
ஈரானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 35 பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் யாஸ்ட்டில் உள்ள சோதனைச் சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.
இதன்பின்னர் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்தின் போது பேருந்தில் 53 பயணிகள் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவர்களில் பெரும்பாலோர் சிந்துவில் உள்ள லர்கானா, கோட்கி மற்றும் பிற நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் யாஸ்ட்டில் உள்ள வைத்திசாலையக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.