ஆட்சிக்கு வந்தால் எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவி: டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதன் நிமித்தம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸூக்கும் இடையில் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.

இப் போட்டியில் தொழிலதிபர் எலான் மஸ்க் ட்ரம்புக்கு முழு ஆதரவளித்து வருகிறார்.

இவ்வாறிருக்க அமெரிக்க ஊடகமொன்றுக்கு ட்ரம்ப் பேட்டியளிக்கையில், எலான் மஸ்க்குக்கு அவரது ஆட்சியில் பதவி வழங்கப்படுமா எனும் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப், தான் மறுபடியும் வெற்றியீட்டி வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது, தனது நிர்வாகத்தில் இணைய எலான் மஸ்க் விருப்பம்கொண்டால், அவருக்கு அமைச்சர் அல்லது ஆலோசகர் பதவி வழங்க விருப்பப்படுவதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் 7500 அமெரிக்க டொலர் வரிச் சலுகையை நீக்குவது குறித்தும் சிந்திக்கவுள்ளமாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘நான் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்’ என எலான் மஸ்க் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒருவேளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கை இணைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button