சஜித் வெற்றிபெற்றால் இந்தியாவைவிட இலங்கை வளர்ச்சியடையும்

திறமை இருந்தால் இலங்கைத் தீவை அபிவிருத்தி செய்வது கடினம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

”இலங்கையை அபிவிருத்தி செய்யக் கூடிய சிறந்த அணி சஜித்திடமே உள்ளது. அந்த அணியால் நாட்டை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்த முடியும்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் அவர் சிறிய மக்களின் ஜனாதிபதியாக இருப்பார். அதற்கான சந்தர்ப்பம் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. மக்களால் அவரை அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும். அதற்காகவே காத்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இந்தியா இன்று உள்ளதைவிட எமது நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க தயாராகிவிட்டனர்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button