உலகம்
மீண்டும் 25 ஆண்டுகளின் பின்னர் பரவும் நோய்: சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய காசா பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் போலியோ நோயுடன் குழந்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாத 10 மாத குழந்தைக்கே இவ்வாறு போலியோ உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போலியோ வைரஸ், பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவுகின்றது.
இந்த நோயின் தாக்கம் அதிகரித்தால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நோய் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றது.