அமெரிக்காவில் மந்த நிலை?: பொருளாதாரத்தை கையாள்வதற்கான ஆளுமை – ட்ரம்ப் முன்னலை
பொருளாதாரத்தை உடைத்த தீவிர கலிபோர்னியா தாராளவாதி என ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும்
குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கும் நிலையில் பிரதான இரு வேட்பாளர்களான ஹாரிஸ் மற்றம் ட்ரம்ப் இடையேயான பிரச்சார
நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனது பிரச்சாரத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதாரத்தைக் கையாள்வதற்கான ஆளுமை ட்ரம்பிற்கே அதிகமாக இருப்பதாக 45 வீதமான மக்கள் நம்புகின்றனர்.
மேலும் கமலா ஹாரிஸிற்கு பொருளாதாரத்தைக் கையாள்வதற்கான ஆளுமை காணப்படுவதாக 38 சதவீதமான மக்களே நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோசியேட்டட் பிரஸ்-என்ஆர்சி சென்டர் ஃபார் பப்ளிக் அஃபர்ஸ் ரிசர்ச் கருத்துக்கணிப்பின் படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயின் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்தும் அதிக விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வருவதால் இது குறித்து பரவலாக பேசப்படுகின்றன.
வருடா வருடம் பணவீக்கம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த அளவை எட்டியிருந்தாலும் கூட, உணவுப் பொருட்களின் விலைகள் அப்போதிலிருந்து 21 சதவீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை மற்றும் ஏனைய வீட்டுச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் சிலர் மந்தநிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.