வாய்ப்பு பொருளாதார திட்டம்; பொருட்களின் விலை உயர்வுக்கு இடமில்லை; கலமா உறுதி
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தில் தனது முதல் முக்கிய கொள்கை உரைகளில் ஒன்றில், “செலவுகளைக் குறைத்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் பொருளாதாரப் பாதுகாப்பை அதிகரிப்பதாக” கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார்.
நடுத்தர வர்க்கத்தினருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் வாய்ப்பு பொருளாதாரம் எனும் தனது திட்டத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
அந்த திட்டத்தில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு என்று அழைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியும் அடங்கும் என்றார்.
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கான வரிகளைக் குறைத்தல், கடைக்காரர்களால் விலை நிர்ணயம் செய்யப்படுவதை தவிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு 25,000 அமெரிக்க டொலர் வழங்குவதற்கான திட்டத்தையும், அத்துடன் மலிவு விலையில் வீடு கட்டுபவர்களுக்கு வரிச் சலுகைகளையும் அவர் முன்மொழிந்தார்.