ஆண்டின் முதல் பெருநிலவு ஆகஸ்ட் 19 ஆம் திகதி சிங்கப்பூர் வானத்தை ஒளியூட்டும்

ஆகஸ்ட் 19ஆம்  திகதி இரவு 7 மணிக்கு இவ்வாண்டின் முதல் பெருநிலவைப் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருநிலவின் முழுப் பொலிவையும் ஆக ஒளிமயமாக இருக்கும் காட்சியையும் ஆகஸ்ட் 20ஆம் திகதி அதிகாலை சுமார் 1.00 மணிக்குப் பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டது.

முழுநிலவு உலகுக்கு ஆக அருகே இருந்தபடி வலம் வந்தால் அது பெருநிலவு என்றழைக்கப்படும்.

இந்தப் பெருநிலவைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிறப்புக் கருவியும் தேவையில்லை.

சிங்கப்பூரில் மரினா அணைக்கட்டு, ஈஸ்ட் கோஸ்ட் பார்க், சவுத் (தெற்கு) ரிட்ஜ்ஸ் போன்ற பகுதிகளில் இந்தப் பெருநிலவை நாம் சிறப்பாகப் பார்க்க முடியும் என அறிவியல் மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இடங்கள் இரவு வானத்தின் தடையற்ற, உயரமான காட்சிகளை வழங்குகின்றன என்றும் அது கூறியுள்ளது.

வானிலை சீராக இருந்தால் இந்தப் பெருநிலவை நாம் செப்டம்பர் 18ஆம் திகதி, அக்டோபர் 17ஆம் திகதி, நவம்பர் 15ஆம் திகதி ஆகிய நாள்களிலும் கண்டுகளிக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button