உலகம்
மத்திய சூடானில் பதற்றம்: பொது மக்கள் 80 பேர் உயிரிழப்பு!
மத்திய சூடானின் சின்னார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் துணை இராணுவக் குழு (RSF) நடத்திய தாக்குதலில் சுமார் 80 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து RSF இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, சின்னார் மாநிலத்தில் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக 7,25,000க்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சமீபத்திய ஐ.நா தரவுகளின்படி, சூடானிலிருந்து சுமார் 2.2 மில்லியன் மக்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.