பீகார் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

இந்தியா, பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலம், ஜெகனாபாத் மாவட்டம் மக்தூம்பூர் பகுதியிலுள்ள உள்ள வானவாரில் அமைந்துள்ள பாபா சித்தேஷ்வர்நாத் கோவிலிலேயே இச் சம்பவம் நடந்துள்ளது.

குறித்த கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் மரணத்தையும் அரச நிர்வாகம் உறுதி செய்துள்ளதோடு, மேலம் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அனைத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம் எனவும் ஜெகனாபாத் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *