உலகம்

வன்முறைகளால் பெரும் பதற்றத்தில் பிரித்தானியா; ஆயிரக்கணக்கான சிறப்புப் பொலிஸார் குவிப்பு

பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான கலகத்தடுப்பு பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தீவிர வலதுசாரி குழுக்கள் நாட்டின் 30க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்ற சட்டத்தரணிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கியிருக்கும் கட்டிடங்கள் போராட்டகாரர்களின் முதன்மை இலக்குகளாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீண்டும் வன்முறை ஏற்பட்டால் அதனை சமாளிக்க 6,000 சிறப்புப் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

வடமேற்கு இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் கத்திக்குத்து தாக்குதலில் ஒன்பது, ஏழு மற்றும் ஆறு வயதுடைய மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐந்து குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர் முஸ்லீம் புகலிடக் கோரிக்கையாளர் என்று சமூக ஊடகங்களில் முதலில் தவறான வதந்திகள் பரவின.

சந்தேக நபர் வேல்ஸில் பிறந்த 17 வயது ஆக்செல் ருடகுபனா என பின்னர் அடையாளம் காணப்பட்டார். அவரது பெற்றோர் ருவாண்டாவை சேர்ந்தவர்கள் என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து சவுத்போர்ட்டில் உள்ளூர் மசூதியை மையமாகக் கொண்டு ஆரம்பமான வன்முறைகள், இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து வரை பரவியுள்ளது.

2011 லண்டன் கலவரத்திற்குப் பிறகு பிரித்தானியாவில் மோசமான வன்முறை வெடித்துள்ளது.இதனால் பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிரித்தானியாவின் தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில், அமைதியின்மை மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.