ஜேவிபியின் வெற்றிக்காக; தாயகம் திரும்பும் கனடா வாழ் இலங்கையர்கள்

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்வதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வருகைத் தர ஆரம்பித்துள்ளதாக கட்சிசார்பில் செயற்படும் சமூகவலைத்தளப் பதிவுகள் கூறுகின்றன.

இதில் முதல் குழு கனடாவில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சமூகவலைத்தளப் பதிவுகளில் காணப்படுகின்றன.

Oruvan

தேசிய மக்கள் சக்தி கனடா அமைப்பின் கீழ், குறித்த குழு வருகைத் தந்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கியிருந்து தீவிர அரசியலில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி , நாட்டிற்கு அதிக அந்நிய செலாவணியை வழங்கும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், நாட்டிற்கு வந்து தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button