இன்று ஆடி பெருக்கு: நல்ல நேரத்தில் இதை மட்டும் செய்துவிடுங்கள்

ஆடிப் பெருக்கு 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் 3ஆம் சனிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகின்றது.

இன்று பிற்பகல் வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் வருகிறது.

இதனால் காலை 7.45 முதல் 8.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது.

மாலையில் 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரம் உள்ளது. அதன் பிறகு அமாவாசை திதி துவங்கி விடுகிறது. இது முன்னோர் வழிபாட்டிற்குரிய ஆடி அமாவாசை தினம் ஆகும்.

சனிக்கிழமை என்பதால் காலை 9 முதல் 10.30 வரையிலான நேரம் ராகு கால நேரமாகவும், பகல் 01.30 முதல் 3 மணி வரையிலான நேரம் எமகண்ட நேரமாகவும் உள்ளது.

எனவே காலை 9 மணிக்குள் வழிபாட்டினை முடித்தால் சிறப்பு.

இந்த நாளில் ஆறுகளில் புது வெள்ளம் பாயும் என்பதால், அன்று எது வாங்கினாலும் பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

அதனால் அன்றைய தினம் என்ன வாங்கலாம்? என்ன செய்யனும் செய்யக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

Oruvan

1. விவசாயத்திற்கு மிகவும் தேவையானது நீர் வளம். அது எப்போதும் தேவை என்பதற்காகக் காவிரித்தாயை அன்றைய தினம் பூ, பழம் வைத்து வணங்க வேண்டும்.

2. ஆடிப் பெருக்கு மங்களகரமான நாள்.. அன்றைய தினம் எதை வாங்கினாலும் பெருகும். அத்தகைய அற்புத நாள் இந்த ஆடி 18. இந்த நாளில் நம்முடைய வசதிக்கு ஏற்ப நம்மால் முடிந்த பொருகளை வாங்கி வருவது நல்லது.

3. ஆடி பெருக்கு அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்க முடிந்தால் வாங்கலாம்.. அப்படி வாங்கினால் அது மென்மேலும் பெருகி நம்முடைய வறுமையை நீக்கி குடும்பத்தில் சந்தோஷத்தை நிலைநாட்டும்..

4. ஆடி 18ஆம் நாள் அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்க முடியாதவர்கள், புதிதாக மஞ்சள் கிழங்கு வாங்கலாம். மஞ்சள் மகாலட்சுமியின் அருளைக் கொண்டது.. மஞ்சள் பொடியாகவும் வாங்கி வீட்டில் வைக்கலாம். அந்த மஞ்சள் தங்கத்திற்கு இணையானது ஆகும். அதனால்தான் தாலி கயிற்றில் தங்கத்திற்கு பதிலாக மஞ்சள் கயிறும் கட்டிக் கொள்வார்கள்..

5. அதுபோலவே உப்பும் ஆடி 18ஆம் தேதி வாங்கி வைக்கலாம் என்பார்கள் நம் வீட்டு பெரியவர்கள்.. அதற்கு காரணம் இதுவும் மகாலட்சுமியின் அம்சமாகும்.. மகாலட்சுமி, குபேரனின் அம்சமாக உப்பு பார்க்கப்படுகிறது. அதனால் இதனை வாங்கி ஜாடியில் புதியதாக கொட்டி வைப்பது அனைத்து வித செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

6. ஆடி 18ஆம் தேதியில் உணவை தானம் செய்வது சிறப்பு.. நாம் தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியம், ஆடி பெருக்கில் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். அதனால் உங்களால் முடிந்த அளவு ஏழை, எளியவருக்கு உணவு தானமாக கொடுத்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

7. இந்த திருநாளில் பணம் மற்றும் நகை அகியவற்றை கடனாகப் பெற கூடாது கொடுக்கவும் கூடாது. இந்த திருநாளில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்தால் இறைவனின் முழு அருளையும் பெறலாம் என்பது நம்பிக்கை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *