மைதானத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அஸ்வின்; வைரலாகும் காணொளி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் (TNPL) போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன.

போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஸ்வின், பொதுவாக அமைதியான நபர் ஆவார். எனினும், அவர், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் போது கோபத்தில் கொதித்தெழுகின்றமை கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஸ்வின், தனது அணியில் ஒருவரை நோக்கி ஆக்ரோஷமாக சைகை செய்து தவறான வார்த்தைகளை பிரியோகிக்கிறார் என தற்போது குறித்த காணொளி பகிரப்பட்டு வருகிறது.

2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் எலிமினேட்டர் டையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதிய போது அஸ்வினின் கோபமான அவதாரம் வெளிவந்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் போது வெளிப்படுத்திய கோபத்தின் மூலம் மற்றொரு கோலியை பார்க்க விரும்பவில்லை என பல்வேறு விதமாக இந்தக் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் திண்டுக்கல் அணி சரிவை எதிர்நோக்கியதால், அஸ்வின் தனது அணியின் அணுகுமுறையில் மகிழ்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *