வணிக வளாகத்தில் திடீரென பரவிய தீ: 11 பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில், சீனா டவுன் மாவட்டத்திலுள்ள வணிக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த வணிக வளாகத்தின் கீழ் தளத்திலுள்ள உணவகத்தில் பற்றிய தீயே கட்டிடத்தின் மேல் பகுதிவரையில் பரவியுள்ளது.

சம்பவமறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஆனாலும் கட்டிடத்துக்குள் சிக்கிய 11 பேர் தீயிற்கு இரையாகி உயிரிழந்துள்ளனர்.

திடீரென கட்டிடத்தில் தீப்பிடித்த காரணத்தை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *