கனடா ரொறொன்ரோவில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு: தந்தை – மகன் கைது
மேற்கு நாடான கனடா ரொறொன்ரோ மாநிலத்தில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது என ரோயல் கனேடியன மவுண்டன் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் 62 மற்றும் 26 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
றிச்மண்ட் மண்டப (Richmond Hill) நகர விடுதி ஒன்றில் கைதான சந்தேகநபர்கள் இருவரும் தந்தை, மகன் என ரோயல் கனேடியன மவுண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு எதிரான ஒன்பது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் ஸ்காபிறோவில் (Scarborough) ஒரே முகவரியில் வசிப்பதாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்கள் கனடிய குடியுரிமை கொண்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இவர்கள் இருவரும் இஸ்லாமிய அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் சமீபத்தில் ஆயுதங்கள் கொள்வனவு செய்ததாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும, எதிர்கொள்ளப்பட்டிருக்கு கூடிய அச்சுறுத்தலின் தன்மை குறித்து தகவல் வெளியிட தடை உத்தரவு அமுலில் உள்ளது. இதனால் ரொறொன்ரோ நகரவாசிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் பொலிஸ் தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றொரு விசாரணைக்கு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப் படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.