தங்கப்பதக்கங்களை அள்ளி முதலிடத்தில் அவுஸ்திரேலியா: அடுத்த அடுத்த இடங்களை பிடித்த நாடுகள் எவை?
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.
இதேவேளை, ஒலிம்பிக் போட்டிகளில் வீர வீராங்கனைகள் தங்களின் திறமைகளை காண்பித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
அந்தவகையில், இன்றைய போட்டிகளின் முடிவின் அடிப்படையில் பதக்க பட்டியலில் அவுஸ்திரேலியா 3 தங்கம், 2 வெள்ளி அடங்களாக மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று முதலிடத்திலும் இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சீனா இரண்டாவது இடத்திலும் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெங்கல பதக்கங்களை வென்று ஐக்கிய அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சைக்கிள் ஓட்ட போட்டி, நீச்சல் போட்டி ஆகிய பிரிவுகின் கீழ் அவுஸ்த்திரேலியா தங்கங்களை சுவீகரித்துள்ளது.
இதேவேளை, 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஜூலை 26 கோலாகலமாக தொடங்கியது.
இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை உட்பட 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இது பிரான்ஸில் நடக்கும் 3வது ஒலிம்பிக் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()