கால்பந்து மைதானத்தில் ரொக்கெட் தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு – ரஷ்யா கண்டனம்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று (27) சனிக்கிழமை நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவுடனான போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து இஸ்ரேல் அல்லது இஸ்ரேலிய இணைப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகின்ற போதிலும், ஹிஸ்புல்லா இதற்கு பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் காசா போருக்கு இணையாக நடந்த போர்களில் பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளதுடன், அச்சத்தை எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, ஹிஸ்புல்லா இதுவரை செலுத்தாத மிகப்பாரிய விலை செலுத்துமென பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலில் உள்ள ட்ரூஸ் சமூகத்தின் தலைவருடனான தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இஸ்லாமிய எதிர்ப்பிற்கும் இந்தச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இது தொடர்பான அனைத்து தவறான குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவ நிலைகளை குறிவைத்து பல ஏவுகணைத் தாக்குதல்களை முன்னரே ஹிஸ்புல்லா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல், ஈரான், பாலஸ்தீனிய ஆணையம் மற்றும் ஹமாஸ் உட்பட மத்திய கிழக்கின் பெரும்பாலான முக்கிய வீரர்களுடன் உறவுகளை வைத்திருக்கும் மாஸ்கோ, கோலன் பகுதியில் நடந்த தாக்குதல்களைக் கண்டித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு நிறுவனமும் மேற்கொள்ளும் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் தாம் கண்டிப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *