ஒரு வயது சிறுமியின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலை: வெற்றிகரமாக நீக்கிய வைத்தியர்கள்

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக ஒரு வயது குழந்தையொன்று மூச்சுத்திணறல் காணரமாக அவதியுற்று வந்துள்ளது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியர்களால் இது தொடர்பாக விரிவாக எதையும் கண்டறியமுடியவில்லை. தற்செயலாக குழந்தையின் தாய், குழந்தைக்கு நிலக்கடலை பிடிக்கும் என வைத்தியர்களிடம் கூறவே, இது தொடர்பில் வைத்தியர்கள் கவனம் செலுத்தி வந்துள்ளனர்.

குழந்தையை வைத்தியர்கள் பரிசோதித்த போது, ஈஎன்டி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் குழந்தைகள் நல வைத்தியர்கள் ஆகியோர் இடது நுரையீரலில் காற்று நுழைவதில் சுவாசக் கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விசேட சத்திரசிகிச்சை நிபுணர் குழுவின் முயற்சியில் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த நிலக்கடலையை வெற்றிகரமாக எடுத்துள்ளனர்.

அறுவைசிக்சிச்சையை தொடர்ந்து குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும் 48 மணிநேர கண்காணிப்பிற்குப் பிறகு மருத்துவனையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *