இலங்கை

‘கறுப்பு ஜூலை’யில் 7 நாட்களில் 5,638 தமிழர்கள் படுகொலை

2015 பேர் காயம், 466 பேர் காணாமல்போயினர்,
615 பாலியல் வல்லுறவுகள், 2,50,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

1983 ஜூலை 23 இலிருந்து 7 நாட்கள் நடந்த மிகப்பெரிய இன அழிப்பு நடவடிக்கைகளில் 5,638 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 2015 பேர் காயமடைந்தனர் .466 பேர் காணாமல் போனார்கள் 615 பேர் பாலியல் வல்லுறவுகளுக்குட்படுத்தப்பட்டனர்.இதுதொடர்பில் இன்று கனடா பிரதமர் கூட கவலை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கையின் தலைவர்கள் 41 வருடங்கள் கடந்தும் இதுவரை வாய்திறக்கவில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ். சிறிரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகைம் போதே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் பேசுகையில்,

2022 மே 18 ஆம் திகதி யை தமிழின படுகொலை நாளாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் கனடா பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது கனடா தமிழ் மக்களுக்கு செய்த மிகப்பெரும் வரப்பிரசாதமான விடயம். உலக அரங்கில் எமக்கு கிடைத்த ஒரு குரல்.அந்த வகையில் 1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ நினைவு கூர்ந்து மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னிற்போர் என்ற ரீதியில் இலங்கையில் நலிவுற்ற சமூகங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டுமென தமது அரசு தொடர்ந்தும் வலியுறுத்துமென தெரிவித்துள்ளார். இது தமிழர்களின் கருப்பு மாதம் எனவரும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா எப்போதும் தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் நாடு.

பிரிட்டனின் புதிய பிரதமர் அவருடைய கட்சி சார்ந்து ஒரு தமிழ் பிரதிநிதியாக பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு உமா குமரன் என்ற தமிழரை தெரிவுசெய்துள்ளார். இந்த இடத்தில் நான் உமாகுமரனை வாழ்த்துகின்றேன். தமிழர் விடயத்தில் கனடாவுக்கு பிரிட்டனுக்கும் பெரும் பங்குள்ளது

தமிழ் மக்கள் மீதி நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. நீதி விசாரணைகள் சரியாக முன்கொண்டு செல்லப்படவில்லை. இவ்விடயத்தில் கனடா முன்னெடுத்திருக்கும் முடிவுகளை ஒவ்வொரு நாடுகளும் வலியுறுத்த வேண்டும். தீர்மானகளாக பாராளுமன்றங்களில் கொண்டு வரவேண்டும்.

ஜே .ஆர்.ஜெயவர்த்தன 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்த போது அப்போதிருந்த ஐ.தே. க அரசின் அமைச்சர்களான சிறில்மத்யூ ,லலித் அத்துலத் முதலி,காமினி திஸாநாயக்க ,ரஞ்சன் விஜேரத்ன போன்றவர்களின் தலைமையில் மிகப்பெரும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கை கொழும்பிலும் மலையகத்திலும் நடத்தப்பட்டது .

அரச ஆதரவுடன் தமிழர்களின் கலை கலாசாரத்தை அழித்தார்கள் .தமிழரின் பாரம்பரிய வாழ்வை அழித்தார்கள் 1983 ஜூலை 23 இலிருந்து 7 நாட்கள் நடந்த மிகப்பெரிய இன அழிப்பு நடவடிக்கைகளில் 5638 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 2015 பேர் காயமடைந்தனர் .466 பேர் காணாமல் போனார்கள் 615 பேர் பாலியல் வல்லுறவுகளுக்குட்படுத்தப்பட்டனர் .5000 வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டன. 2,50,000க்கும் மேற்பட்டோர் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் .

இவ்வளவும் நடந்து 41 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கனடா பிரதம தனது கவலையை வெளியிடுகின்றார் ,பிரிட்டன் பிரதமர் இது தொடர்பில் சிந்திக்கின்றவராகவுள்ளார். இந்த நாட்டிலுள்ள நீதி அமைச்சரும் தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பில் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். இது ஒரு வரலாற்றின் பதிவு. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு நான் நன்றி கூறுகின்றேன். 41 வருடங்களின் பின்னராவது நீங்கள் இந்தளவுக்கு சிந்தித்து மன்னிப்புகோரியது மிகப்பெரிய விடயம்.ஆனால் இத்தோடு மட்டும் நின்று விடக்கூடாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.