பிரித்தானிய பொலிஸாரின் கொடூரத் தாக்குதல்

பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் சந்தேகநபர் ஒருவர் மீது அந்நாட்டு பொலிஸார் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டு முத்திரைக் குத்தியுள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தரையில் படுத்திருந்த நபரின் மீது சீருடை அணிந்திருந்த பொலிஸார் பல தடவைகள் காலில் உதைத்து முத்திரைக் குத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்ககு முன்பாக சுமார் 200 இற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தொடர்பான சுயாதீன அலுவலகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *