ரஷ்ய புலனாய்வுத்துறை அதிகாரியை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல்; குற்றவியல் வழக்குத் தாக்கல்

ரஷ்ய இராணுவத்தின் புலனாய்வுத்துறை அதிகாரியை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மொஸ்கோ பகுதியில் இன்று (24) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில், குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த குண்டுவெடிப்பில் அதிகாரியும் அவரது மனைவியும் காயமடைந்ததாக மாநில செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் மேலும் ஐந்து கார்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button