பிறந்தநாளில் எதற்காக கேக் வெட்டி மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது?
பிறந்தநாள் என்றவுடன் உடனே நம் நினைவுக்கு வருவது கேக், மெழுகுவர்த்தி ஆகியவைதான். காலம் காலமாக மெழுகுவர்த்தி ஊதி அணைத்து கேக் வெட்டுகிறார்கள்.
ஆனால், என்றாவது மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கான காரணம் என்னவென்று அறிய முற்பட்டிருப்போமா?
பிறந்தநாளில் கேக் வெட்டும் வழக்கமானது, ஜேர்மனியில் உருவானது என்று கூறப்படுகிறது.
இக் கொண்டாட்டத்தை கிண்டர் ஃபெஸ்ட் என்று அழைக்கின்றனர்.
அந்த வகையில் மெழுகுவர்த்தியை முதலில் பயன்படுத்தியவர்கள் கிரேக்கர்கள்.
ஆர்ட்டெமிஸ் எனும் தெய்வத்தை கிரேக்கர்கள் வணங்கும்போது ஒரு வட்ட கேக்கில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டுள்ளன.
இந்த கேக்குகள் வட்ட வடிவில் சந்திரனைப் போல் காணப்பட்டன.
மெழுகுவர்த்தியில் இருந்து வரும் ஒளி சந்திரனின் ஒளியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும்போது அந்த புகை மேலே செல்கிறது. கிரேக்கர்கள் இந்தப் புகையை புனிதமானதாகக் கருதுகிறார்கள்.
அதாவது அவர்கள் பிரார்த்தனை செய்யும் எந்த ஆசைகளும் இந்த புகை வடிவில் அவர்களின் தெய்வமான ஆர்ட்டெமிஸை சென்றடையும் என இவர்கள் நம்பினர்.
இதுவே பிற்காலத்தில் பிறந்தநாள் என்றால் கேக் வெட்டி மெழுகுவர்த்தி ஊதி அணைப்பது வழக்கமாகிவிட்டது.
![]()