உலகம்
பங்களாதேஷ் வன்முறை; பின்னணியில் எதிர்க்கட்சி; பிரதமர் ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் அந்நாட்டின் எதிர்க்கட்சியின் சூழ்ச்சி சம்பந்தப்பட்டிருப்பதாக பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சுமத்தியுள்ளார்.
தொழில் ஒதுக்கச் சட்டம் தொடர்பாக எழுந்த எதிர்ப்பின் காரணமாக, அந்தநாட்டில் கடுமையான வன்முறைகள் பதிவாகி இருந்தன. இதனால் 150க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த நாட்டின் வர்த்தகத் தரப்பினருடன் கலந்துரையாடிய ஷேக் ஹசீனா, நாட்டின் பாதுகாப்புக் கருதி ஊரடங்கு சட்டத்தை அமுலாக்கினார்.
நிலைமை சீரடையும் போது ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.