சாணக்கியனை கொலை செய்ய சதி: இராஜாங்க அமைச்சர் ஒருவர் தொடர்பு – வெளியான பரபரப்பு செய்தி

தம்மை கொலை செய்ய இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு தகவலொன்றை மேற்கோள்காட்டி லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர்,

லங்கா ஈ நியூஸ் என்ற செய்தி தளத்தில் என்னை படுகொலை செய்ய திட்டமிடடுள்ளதாக சர்வதேச புனவாய்வு தகவலொன்றின் அடிப்படையில் செய்தியொன்று கடந்த 20ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

ஆளுங்கட்சி இராஜாங்க அமைச்சர் ஒருவர்தான் இந்த சதியின் பின்புலத்தில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராஜாங்க அமைச்சர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் மற்றும் பல்வேறு மனித படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த செய்தி தொடர்பில் பரிசீலனை செய்து சபாநாயகர் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

அந்த செய்தி உண்மையா அல்லது பொய்யா எனத் தெரியவில்லை. ஆனால், குறித்த நபர் பல்வேறு படுகொலைகளுடன் குறிப்பாக எம்.பிகளின் படுகொலையுடன் கூட தொடர்புடையவர்கள் என்பதால் பரிசீலனை செய்ய வேண்டும்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button