தேர்தல் – நீதிமன்ற மனுக்களுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை; ரணில் விளக்குகிறார்
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணம் ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசுகின்றனர். பொதுத்தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. “ஜனாதிபதித் தேர்தலுக்காக மட்டுமே வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கையில் வைத்திருப்பதாகக் கூறியுள்ள ஜனாதிபதி, அதிக முயற்சி எடுத்தால் அதை ஆறு ஐந்து மற்றும் ஐந்து ஆறாக ஆக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்த ரொஹான் பல்லேவத்தவின் கட்சி அங்கத்துவம் குறித்து அறிய எங்களுக்கு ஒரு நாள் தேவைப்பட்டது. எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.