சுலவேசி துரியனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: 36.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏற்றுமதி
தென்கிழக்கு ஆசிய நாடுகளை பொருத்தவரையில் மிகவும் பிரபலமான பழம் தான் துரியன்(முள்நாறி). அனேகமானவர்கள் இந்த பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், பலர் இதன் வாசனையின் காரணமாக விரும்பி சாப்பிடுவதில்லை.
இதனடிப்படையில், அண்மைகாலமாக சீனாவில் துரியனின் தேவை அதிகரித்துள்ளதால் மத்திய சுலவேசி மாகாணத்தில் இருந்து நேரடியாக சீனாவுக்கு துரியன் பழங்களை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்தோனேசிய அரசாங்கம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்,
“ இது ஒரு அருமையான வாய்ப்பு. இதை நாங்கள் சரியாக பயன்படுத்த விரும்புகின்றோம். சீனாவுக்கான துரியன் ஏற்றுமதி சந்தையில் மத்திய சுலவேநி பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
சுலவேசி மாகாணத்தில் 12 மாவட்டங்கள் அமைந்துள்ளன. அங்கு சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான துரியன் மரங்கள் காணப்படுகின்றன. 30000 ஹெக்டேயர் பரப்பளவில் துரியன் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
இதனால் அங்கு மிகவும் தரமான பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகவே, இந்தோனேசிய விவசாய தனிமைப்படுத்தல் முகாமையின் தரவுகளின் படி, மத்திய சுலவேசியிலிருந்து சீனாவுக்கு 600பில்லியன் ரூபாய்க்கு அதாவது 36.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏற்றுமதி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிர்காலத்தில் இந்த ஏற்றுமதி நடவடிக்கை சீராக நடைபெற, மத்திய அரசின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போது, எங்களிடம் 1,634.29 ஹெக்டேர் நிலம் நல்ல விவசாய நடைமுறைகளுடன் (ஜிஏபி) பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் 133 பதிவு செய்யப்பட்ட விவசாயிகளை வேலைக்கு அமர்த்துகிறோம் மற்றும் 10 துரியன் பேக்கிங் ஹவுஸ்களை நிர்வகிக்கிறோம். ,”எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.