உலகம்

அமெரிக்க தேர்தல்; அதிபர் வேட்பாளராக கமலா; பைடன் ஆதரவு;  டிரம்பை தோற்கடிப்போம்; கமலா சூளுரை

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த சூழலில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் திகதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது.

இதில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார்.

81 வயதாகும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.

இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். இதனிடையே ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூட ஜோ பைடன் விலக வேண்டும் என்று கூறி இருந்தார்.

மேலும் ஜோ பைடனின் குடும்பத்தினரும் அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கூறியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்தார். இதனால், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் கமலா ஹாரிசை ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நியமிக்க ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “எனது சக ஜனநாயகக் கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன்.

2020ல் கட்சி வேட்பாளராக எனது முதல் முடிவு கமலா ஹாரிசை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்ததுதான். இது நான் எடுத்த சிறந்த முடிவு. இந்த ஆண்டு எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் வருவதற்கு எனது முழு ஆதரவையும், ஒப்புதலையும் வழங்க விரும்புகிறேன். ஜனநாயகவாதிகள் – ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்” என்று அதில் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

டிரம்பை தோற்கடிப்போம்; கமலா ஹாரிஸ் சூளுரை

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கடந்த 19-ம் தேதி நடந்த குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டின்போது, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முடிவுடன் பைடன் களம் இறங்கினார். ஆனால், வயது முதிர்வால் சமீபத்திய கூட்டங்களில் பேசும்போது அவர் திணறினார். இதனால், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிராக குரல்கள் வலுத்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

அதற்கான அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார். எனினும், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், 2025-ம் ஆண்டு ஜனவரி வரை அதிபராக தொடர்ந்து பதவியில் நீடிப்பேன் என்றும் இந்த வாரம் நாட்டுக்கு உரையாற்றுவேன் என்றும் அவர் பதிவிட்டார். அதற்கு அடுத்த 30 நிமிடங்களுக்குள் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை முனனிறுத்தினார். அவருக்கான தன்னுடைய முழு ஆதரவையும் பைடன் வெளிப்படுத்தினார். இதனால், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் வலுவான போட்டியாளராக இருப்பார் என பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஹாரிஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செனட் உறுப்பினர்கள் மற்றும் கவர்னர்கள் உள்ளிட்டோரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசி ஆதரவு திரட்டி வருகிறார். இந்த தேர்தலில் தன்னை முன்னிறுத்தியதற்காக ஹாரிஸ் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொண்டார். ஜனநாயக கட்சியை ஓரணியாக திரட்டி, இந்த தேர்தலில் டிரம்பை தோற்கடிப்போம் என்றார். அவரை வீழ்த்தி காட்டுவேன் என்றும் ஹாரிஸ் சூளுரைத்து உள்ளார்.

ஹாரிசுக்கு கட்சியின் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசோம் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். சமீப வாரங்களாக, பைடனுக்கு பதிலாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என கவின் முன்பே தன்னை முன்னிறுத்தி கூறினார்.

இந்த சூழலில், அவர் வெளியிட்ட செய்தியில், நம்முடைய நாட்டை ஆரோக்கியம் நிறைந்த வழியிலான பயணத்திற்கு வழிகாட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை விட சிறந்த வேறொருவர் யாரும் இல்லை. டிரம்ப்பின் இருண்ட தொலைநோக்கு பார்வையை வீழ்த்தி, அமெரிக்க ஜனநாயகம் எதிர்காலத்தில் வளருவதற்கான சரியான, அச்சமற்ற, உறுதி வாய்ந்த நபராக ஹாரிஸ் இருப்பார் என அவர் தெரிவித்து உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.