இலங்கை

“19” பற்றி எனக்கு நன்றாக தெரியும்: ஜனாதிபதிக்கு மைத்திரியின் பதில்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் எல்லையற்ற அதிகாரத்தை குறைத்து, ஜனாதிபதி பதவிக் காலத்தை 06 வருடங்களிலிருந்து 05 வருடங்களாக குறைப்பதே 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில்  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் தனக்கு நன்றாக தெரியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட வேளையில் சொக்‌ஸி இறைபதம் அடைந்திருந்த காரணத்தால் அந்த பணிகளை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் கையளிக்க வேண்டியிருந்தாக தெரிவித்த ஜனாதிபதி அவரின் தவறு காரணமாகவே தற்போது சிக்கலான நிலைமை உருவாகியிருப்பதாக கூறினார்.

காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை (19) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தின் உச்ச வரம்பை ஆறிலிருந்து ஐந்து வருடங்களாகக் குறைப்பதில் ஏற்பட்ட தவறு ஜயம்பதியின் கவனக்குறைவாக இருக்கலாம் எனவும் அவர் கூறியதுடன் இதற்காக, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பும் கோரினார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையின் பிரகாரம் 19வது அரசியலமைப்பு திருத்த வரைபு வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படாது என்ற அடிப்படையிலேயே முழு திருத்தச் செயற்பாடுகளும் இடம்பெற்றதாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன பதலளித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.