கட்டுரைகள்

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் வாழ்க்கை…. இரா.சிவலிங்கம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலகில் பெண்கள் அதிகமாக வாழ்கின்றனர். வீட்டு வேலைகள் தொடக்கம் விளம்பரம் வரை பெண்களே முன்னிலை வகிக்கின்றார்கள். இன்று பெண்கள் பல துறைகளிகளில் முன்னெற்றமடைந்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் வேலை செய்யாத துறைகளே இல்லையென்றே கூறலாம்.
ஆனால் இந்த வாய்ப்புகளும் வசதிகளும் உலகில் உள்ள எல்லா பெண்களுக்கும் கிடைத்துள்ளதா? என்பதை நோக்கும் போது ப ல்வேறு விடயங்களில் தேயிலைத் தோட்டத் தொழிளாளர் பெண்கள் பின் தங்யிருப்பதை காணலாம்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிகளவு பங்களிப்பை வழங்கி வரும் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். தேயிலை உற்பத்தி துறையில் வேலை செய்கின்ற பெண் தொழிலாளர்கள் சுமார் 200 வருடங்களுக்கு மேல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை செய்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளியொருவரை எடுத்துக் கொண்டால் பெரும்பாலானோர் தமது பதினாறு அல்லது பதினெட்டு வயதிலேயே தோட்டத்தில் பெயர் பதிவு செய்து வேலை செய்ய தொடங்குகின்றனர். இவ்வயதில் ஆரம்பிக்கும் கொழுந்து பறிக்கும் தொழிலானது எவ்வித மாற்றமும் முன்னேற்றமும் இன்றி ஓய்வு பெறும்வரை தொடர்கின்றது. (ஆழப்புதைந்த அப்பனின் சிதை மேல்…, சி.வி. வேலுபிள்ளளை.) மலையகத்தில் உள்ள பெருந்தோட்டப் பெண்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிப்பதையே பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். திருமணம் முடித்து கணவன், பிள்ளைகளோடு வாழ்கின்ற பெண்னொருவரின் ஒரு நாள் வாழ்க்கையை நோக்கினால் உலகில் இவ்வாறும் பெண்கள் சமூகம் கஸ்டப்படுகின்றதா? என்று சிந்திக்கத் தோன்றும்.

பல அறிஞர்களும், கவிஞர்களும் பல்வேறு விதமான வெற்று வார்த்தை ஜாலங்களால் பெண் விடுதலை, பெண்களின் உரிமைகள், பெண் அடிமை, பெண்களின் குணங்கள், பெண்களின் அழகு, பெண்கள் கலாசாரம்,பெண்களுக்கே உரிய தாய்மை அம்சம், பெண்களின் முக்கியத்துவம், பெண்களின் படைப்பு போன்ற பல்வேறு விடயங்களில் பெண்கள் சார்பான விடயங்கள் முன்வைக்கப்படுவதை காணலாம்.

குறிப்பாக இன்று தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளியொருவர் காலை 5 மணிக்கு எழும்பி விட வேண்டும். கடும் குளிருக்கு மத்தியிலும் காலைக் கடன்கள் (வீட்டு வேலைகள) அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். பல்வேறு வாழ்க்கை பிரச்சினைகள் மத்தியிலும் தங்களது வேலைகளை பூர்த்தி செய்து விட்டு செல்கின்றனர். ஒரு சில தோட்டங்களில் எந்நேரமும் குடி நீர் வராது. பொதுக் மலசல கூடங்களே இன்றும் பல தோட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.

தோட்டத் தெரிலிளாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் மாடாக உழைத்தாலும் இவர்களுக்கு தரம் குறைந்த தேயிலைத் தூளே வழங்கப்படுகின்றது. இன்று வரையும் சிறந்த தேயிலைக் கூட பெற முடியாத அப்பாவி தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். ரொட்டியைத் தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு காலையில் தேநீர் தயாரிக்கும் போதும்ää சமைக்கும் போதும் படும் கஸ்டங்களோ சொல்லில் அடங்காதவை. சில் வீடுகளில் மழைக்காலங்களில் காயாத பச்சை விறகுகளை வைத்து ஊதி புகையில் இருக்கும் இவர்கள் ஆஸ்மா உட்பட பல்வேறு நோய்களுக்கு உட்படுகின்றனர். இவர்களின் வீடும் (10 x10) லயன் அறைகள். சிலர் இன்றும் தற்காலிக குடிசைகளிலேயே வாழ்கின்றனர். (தீப்பற்றிய,  மண் சரிவு நடந்த வீடுகளில் வசித்தவர்கள்) இதனால் இவர்களின் லயன் அறைகளும் ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கும்.

ஒருவாறு தேநீரைத் தயாரித்து கணவனுக்கும்ää பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டு அவசர அவசரமாக மாவைப் பிசைந்து ரொட்டியை தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு பிள்ளைகளை பாடசாலைக்கு ஆயத்ப்படுத்த வேண்டும். இறுதியாக தானும் உண்டு தன் கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தக்குச் செல்ல வேண்டும். அங்கு அப்பிள்ளையை விட்டு விட்டு ஓட்டமு நடையுமாக வேலைத் தளத்திற்கு செல்ல வேண்டும். நேரம் பிந்தி வரும் பெண்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விடுகின்றார்கள். இப் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும் உண்டு. வேலைத் தளத்திற்குப் பொறுப்பான கங்காணிää கணக்கப்பிள்ளை ருபோன்றோரிடம் கெஞ்சி, நீண்ட நேரத்திற்குப் பின்னர் வேலைக்கு அனுமதிப்பதும் உண்டு.

பின்னர் தேயிலை மலைக்குச் சென்று தோட்ட நிர்வாகம் எடுக்கச் சொல்லும் இருபது கிலோ கராம் கொழுந்தைப் பறிக்க வேண்டும். கொழுந்து குறைவாக பறித்தால் அன்றைய தினம் அறை பேருதான்.தேநீர் வேளையில் தேயிலைச் செடிகளின் கீழும், மர நிழல்களின் கீழும், கான்கள், வீதியோரங்களில் இருந்து கொண்டும் தேநீரை குடித்து உணவை உட்கொண்டு வருகின்றார்கள். இதுவரையம் இவர்களுக்கு தேநீர் அருந்துவதற்கு ஒரு கூடாரம் கூட இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

10 மணிக்கு உணவு கொண்டு வராதவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் கொழுந்து நிறுக்கப்படும். 10 மணிக்குத் தேநீர் குடித்து விட்டு மீண்டும் தேயிலை மலைக்கு ( நிறைகளுக்கு) சென்று மீண்டும் கொழுந்து பறிக்க வேண்டும். 12 மணிக்கு சாப்பாட்டுக்கு கொழுந்து கூடை சுமையுடன் கொழுந்து மடுவத்திற்கு இரண்டு கிலோமீற்றருக்கு மேல் நடந்து கொழுந்து மடுவத்திற்கு வர வேண்டும். அங்கு கொழுந்து நிறுத்து மீண்டும் வீட்டக்கு வர பகல் 12.30 மணியாகி விடும்.

தொடர்ந்து தன் குழந்தையை பிள்ளை பராமரிப்பு நிலையத்திலிருந்து துக்கிக் கொண்டு வந்து பாலூட்டி, பகலுணவை தயாரித்து கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் வைத்து விட்டு மீண்டும் 1.30 மணிக்கு அதே வேலைத் தளத்திற்கு செல்ல வேண்டும். மழை,வெயில், குளிர், பனி, அட்டைக்கடி, குளவி கொட்டுதல், பாம்பு கடி, சிறுத்தை தொல்லை, தகாத காலநிலை,  உயரமான மலைச் சரிவுகள், கரடுமுறடான பாதை,உயரமான நீண்ட படிக்கட்டுக்கள், பாதுகாப்பான உடைகள் இன்மை, எந்நேரமும் தலையில் கொழுந்து சுமை, போசாக்கான உணவு இன்மை, தொழில் பாதுகாப்பு, தொழில் காப்புறுதி இன்மை, வேலைக்கு மத்தியான உணவிற்கு பின்னர் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லா விட்டால் மீண்டும் அரைநாள் பேருடன் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவாறே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாட்களையும் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 வரையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிலில் மாற்றம் வேண்டும். உடையில் மாற்றம் வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும். தொழில் காப்புறுதி, தொழில்பாதுகாப்பு, தொழில் உரிமை, வேலை நேரம், அரசாங்க சலுகைகள், வீட்டு அமைப்பு முறை, பிள்ளை வளர்ப்பு முறை, பராமரிப்பு முறை, பெண் கல்வி, பெணகளுக்கான சம உரிமைகள், பெண்களுக்கான கௌரவம், பாதுகாப்பு உத்தரவாதம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வீட்டு வன் முறை ஒழிக்கப்பட வேண்டும். இள வயது திருமணம் ஒழிக்கப்பட வேண்டும். பெண்கள் முன்னேற்ற கழகங்கள் உருவாக்கபட்டு பெண்களின் வாழ்க்கை மே;பாட்டுக்கான வேலைத்திட்டங்களை சமூக பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் சுதந்திரமாக வாழ்வதென்பது அந்நாட்டில் சகலரும் சௌபாக்கியமாக வாழ்கின்றார்கள் என்று அர்தத்ம் கொள்ளலாம்.

இரா.சிவலிங்கம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.