கவிதைகள்

“உன்னை மறவேன் வண்ணமயிலே”…. கவிதை ….கிறிஸ்டி நல்லரெத்தினம்.

வானம் புவியில் வீழ்ந்தாலும் – அந்த
வைகை வறண்டு போனாலும்
நிலவு நீரில் மறைந்தாலும் – இந்த
பூமி புதிதாய் பிறந்தாலும்
பூவை வண்டு மறந்தாலும் – அந்த
பாவை பண்பு துறந்தாலும்
தீ நீர் போல் குளிர்ந்தாலும் – அந்த
காலன் கடமையை மறந்தாலும்
கண்கள் இமையை வெறுத்தாலும் – அந்த
கரும்பு மிளகாய் உறைத்தாலும்
மெழுகு தணலில் விறைத்தாலும் – அந்த
சாவே செத்து மடிந்தாலும்
என் இதயத் துடிப்பு உள்ளவரை
உன்னை மறவேன் வண்ணமயிலே!
கிறிஸ்டி நல்லரெத்தினம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.