இலங்கை வந்தார் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா படபிடிப்பிற்காக இலங்கை வந்துள்ளார்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்த விஜய் தேவரகொண்டா, தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருக்கிறார்.

தற்போது இவர் தனது 12ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘ஜெர்சி’ படத்தின் மூலம் பிரபலமான கௌதம் தின்னனுரி இயக்குகிறார்.

கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வைசாக்கில் ஒரு மாத காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வரவுள்ளார். படத்தின் முக்கியமான காட்சிகளை இலங்கையில் படமாக்க உள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை வந்த விஜய் தேவரகொண்டா விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button