ஆணாக மாறிய ஜெயலலிதா: தனியாக அழைத்து கண்டித்த எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியலில் முதல்வராகவும் முத்திரை பதித்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், தான் இயக்கிய ஒரு காட்சிக்காக, ஜெயலலிதாவை தனியாக அழைத்து கண்டித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

துணை நடிகராக அறிமுகமாகி பல போராட்டங்களுக்கு பிறகு நாயகனாக உருவெடுத்த எம்.ஜி.ஆர், அதன்பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையை வளர்த்துக்கொண்டார். மேலும் எடிட்டிங்கில் அவருக்கு அதீத திறமை உண்டு என்பது திரைத்துறையில் பலரும் கூறிய ஒரு முக்கிய தகவல். அதேபோல் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என ஒரு சில படங்களை இயக்கி பெரிய வெற்றயை கண்டவர் தான் எம்.ஜி.ஆர்.

அதேபோல் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என பல பட்டங்களை வைத்திருக்கும் எம்.ஜி.ஆருக்கு வாத்தியார் என்ற பட்டமும் உள்ளது. அந்த பட்டத்திற்கு தகுந்தார்போல் தான் இயக்கிய ஒரு காட்சிக்காக நடிகை ஜெயலலிதாவை கண்டித்துள்ளார் எம்.ஜி.ஆர். 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளியான படம் ரகசிய போலீஸ் 115. ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு பி.ஆர்,பந்தலு எம்.ஜி.ஆர் இருவரும் இணைந்த 2-வது படம் இது.

அசோகன், நாகேஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, வாலி ஒரு பாடலை எழுத மற்ற அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வநத சமயத்தில் ஒரு நாள். இயக்குனர் பி.ஆர்.பந்தலுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்தால் நடிகர் நடிகைகள் கால்ஷீட் வீணாகிவிடும் என்பதால், இன்றைய காட்சியை எம்.ஜி.ஆரை படமாக்குமாறு கூறியுள்ளார் பி.ஆர்.பந்தலு.

இதை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு தயாரான நிலையில், அன்றைய காட்சியில், ஜெயலலிதா ஆண் வேடத்தில் நடிக்க வேண்டும். இதை கேட்டதும் துள்ளிக்குதித்த அவர், ஆண் போலவே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்தார். அவரின் பேச்சும் ஒரு ஆண் போலவே இருந்தது. இதை பார்த்த எம்.ஜி.ஆர், அவரை தனியாக அழைத்து சென்று, ஆண் வேடத்தில் தான் நடிக்க சொன்னேன். அதற்காக நீ ஆண் அல்ல. ஆண் வேடத்தில் நடித்தாலும் ஒரு பெண்ணுக்குரிய நளினத்துடன் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், இதை கேட்ட ஜெயலலிதா அதன்பிறகு சரியான நடிப்பை கொடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button