மாட்டு கொட்டகையில் வாழ்க்கை; சந்திரபாபுவின் இறுதி பக்கம்!

காமெடி நடிகர் ஒருவர் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டபோது இசையமைப்பாளர் எம்.எஸ்.வி உள்ளிட்ட 3 பிரபலங்கள் அவருக்கு சாப்பாடு கொடுத்து உதவி செய்துள்ளனர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும நடிகராக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவரிடம் உதவியாளராக இருந்தவர் தான் சந்திரபாபு. பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்ட இவருக்கு நடிகர் டி.ஆர்,மகாலிங்கம் தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கிறார். 1947-ம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்திரபாபுவுக்கு, 1951ம் ஆண்டு மோகன சுந்தரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னதுரை படத்தில், டி.ஜி.லிங்கப்பா இசையில், சந்திபாபு ஒரு பாடலை பாடியிருந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான். அதேபோல் முதல் வெஸ்டர்ன் பாடல்களை பாடியதும் அவர்தான். இப்படி பல திறமைகளை கையில் வைத்திருந்த சந்திரபாபு சில படங்களுக்கு கதையும் எழுதியள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து நடித்த சந்திரபாபு, கடைசிகாலத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்துள்ளார். கீழே மாட்டு கொட்டகை மேலே ஒரு சிறிய கட்டிலில் நாள் முழுவதும் படுத்திருந்த சந்திரபாபுவுக்கு, எம்.எஸ்.வி, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன் ஆகிய மூவரும் தங்களது வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து உதவியுள்ளனர்.

தினமும் 3 வேளையும் எம்.எஸ்.வி வீட்டில் இருந்து யாராவது ஒருவர் சந்திரபாபுவுக்கு சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர். அதேபோல் அவன் என்ன கேட்கிறானே அதை செய்துகொடுங்கள். அவனுக்கு சாப்பாடு செல்வது நின்றுவிட கூடாது என்று தனது குடும்பத்தினருக்கு கூறியுள்ளார் எம்.எஸ்.வி. அதேபோல் ஆர்.எஸ்.மனோகர் தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவரும் சந்திரபாவுக்கு மதுபானம் அனுப்பினாலும் எம்.எஸ்.வி கடைசிவரை அவருக்கு அதை கொடுக்காமல் இருந்துள்ளார்.

எம்.எஸ்.வி வீட்டு சமையலறை வரை சென்று, அவரது அம்மாவிடம் எனக்கு எதாவது சமைத்து கொடுங்கள் என்று கேட்கும் அளவுக்கு நெருங்கிய நட்புடன் இருந்த சந்திரபாபு இறந்த பிறகு, அவரது உடலை எம்.எஸ்.வி வீட்டு வாசலில் சில நிமிடங்கள் வைத்துவிட்டு அதன்பிறகு எடுத்து சென்றுள்ளனர். இது சந்திரபாபுவின் கடைசி ஆசை என்றும் தகவல்கள் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button