மைதானத்தின் மண்ணை உண்ட ரோஹித் ; நெகிழ்ச்சியான இறுதிப் போட்டி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இந்திய அணி மற்றும் இந்திய அணி வீரர்கள் தொடர்பில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது.

போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.

17 வருடங்களுக்கு பிறகு அடைந்த இந்த வெற்றி இந்தியா மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் உள்ள கிரிக்கட் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

இறுதிப் போட்டி நிறைவடைந்ததன் பின்னர், அநேகமான நெகிழ்ச்சியான தருணங்கள் கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

போட்டி நிறைவடைந்த பின்னர் விராட் கோலி தனது மனைவி மற்றும் மகளுடன் வீடியோ அழைப்பில் பேசியது, பும்ராவின் மனைவியே அவரை நேர்காணல் எடுத்தது போன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், அணியின் தலைவர் ரோஹித் சர்மா டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நிறைவடைந்த பின், பாபடோஸ் மைதானத்தின் ஆடுகளத்தில் இருந்து மண்ணை உண்டது பதிவு செய்யப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களிலும் அதிகளவில் பேசப்பட்டது. பகிரப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ரோஹித் சர்மா தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோஹித் சர்மாவின் கருத்து,

” பாருங்கள், இந்த மாதிரியான விடயங்களை விரிவாக கூற முடியும் என நான் நினைக்கவில்லை. எல்லாமே நீங்கள் அறிந்த விடயங்கள் மாத்திரமே. இந்த புற்தரையில் உள்ள மண். அங்கு தான் நாங்கள் விளையாடினோம். அந்த மைதானம் எனக்கு வாழ்நாள் வரையில் ஞாபகத்தில் இருக்கும். அந்த தருணம் மிகவும் விசேடமானது. எங்களுடைய கனவு வென்ற இடம் எனக்கு தேவைப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிரிக்கட் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், போட்டியின் பின்னர் பதிவு செய்யப்பட்ட சில அழகிய தருணங்கள் கீழே,
sportskeeda

sportskeeda

sportskeeda

sportskeeda

sportskeeda

sportskeeda

sportskeeda

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button