இந்தியா

சூர்யகுமாரின் கால் எல்லைக்கோட்டில் பட்டதா?: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி இரண்டாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியில் வெற்றிபெற 16 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் அற்புதமாக பிடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்நிலையில், எல்லைக் கோட்டுக்கு மிகவும் அருகில் இருந்து எடுப்பட்ட பிடியெடுப்பு தற்போது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

அதற்கு காரணம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி ஒன்று தான். குறித்த பிடியெடுப்பின் போது சூர்யகுமாரின் கால் எல்லைக்கோட்டில் படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த காணொள்யை வைத்து இரு அணி ரசிகர்களும் தங்கள் அணிகளுக்கு சார்பாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *