வயது குறித்த கேள்வி- மீண்டும் பைடனிற்கு தோல்வி
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்புடனான நேரடி விவாத நிகழ்வின்போது தனது வயது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்க தவறியுள்ளார்.
இரண்டு வேட்பாளர்களினதும் வயது குறித்து அமெரிக்க வேட்பாளர்கள் மத்தியில் கரிசனை காணப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கலந்துகொண்ட முதல் விவாதநிகழ்வு அட்லாண்டாவில் இடம்பெற்றது
81வயதான ஜோ பைடனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை தனது அரசியல்வாதியின் முதல்பாதியில் தானே மிகவும் வயது குறைந்த அரசியல்வாதி என தெரிவித்தார்.( செனட்டிற்கு தெரிவு செய்யப்பட்டது குறித்து தெரிவித்தார்).
அதன்பின்னர் அந்த கேள்வியிலிருந்து விலகி தனது அரசாங்கத்தின் பொருளாhதார சாதனைகள் குறித்து கருத்து வெளியிட்டார்.
தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தாங்கள் விரும்பும் கேள்விக்கு பதிலளிப்பது அரசியல்வாதிகளின் இயல்பு.
பைடனின் வயது என்பது அமெரிக்க அரசியலில் கரிசனைக்குரிய விடயமாககாணப்படுகின்றது.இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும்போது அவருக்கு 86 வயதாகும்.
தனது வயது என்பது ஏன் ஒரு பெறுமதியான விடயம் பலவீனம் இல்லை என்பதைமில்லியன் கணக்கான வாக்காளர்களிற்கு முன்வைப்பதற்கு பைடனிற்கு வாய்ப்பு கிட்டியது அவர் அதனை பயன்படுத்தவில்லை – தவறவிட்டார்.