ட்ரம்ப் – பைடன் நேருக்கு நேர் விவாதம்; இரவு 9 மணிக்கு ஆரம்பம்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் உள்ளூர் நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர்.

இத்தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு சர்வதேச ஊடகங்கள், அரசியல் வல்லுனர்கள், விமர்சகர்கள், சமூக ஊடக விமர்கள் என அனைவரும் இருவரின் விவாதத்திற்காக காத்திருக்கின்றனர்.

இதன்போது மீள் குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த விவாதம் சுமார் 90 நிமிடங்களுக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், பிபிசியின் உத்தியோகபூர்வ நாடுதழுவிய ஊடகவியலாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன் சிஎன்என் ஊடகமும் இது ஒரு முன்னோட்டம் இல்லாத விவாதம் வெள்ளை மாளிகையை எந்த வகையிலும் பாதிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button