விமல் கூட்டணியிலிருந்தும் ஜனாதிபதி வேட்பாளர்; பிரச்சார நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

விமல் வீரவன்சவை மையப்படுத்திய சர்வ ஜன பலய கூட்டணி ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதாகவும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

காலி மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் முதன்மையான மாற்றமாக ‘சர்வ ஜன பலய’ கூட்டணி உருவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒரே அரசியல் குழு தனது கூட்டணி என்று கூறிய அவர், மற்ற அனைத்து கட்சிகளும் வலதுசாரி என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் அதனை கடைப்பிடிப்பதாகவும், தமது கூட்டணி மக்களுக்கு தனித்துவமான மாற்றீட்டை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரங்களை விரைவில் ஆரம்பிக்க சர்வ ஜன பலய கூட்டணி தயாராக இருப்பதாகவும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெயரிடப்படுவார் எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்,

எனினும், அந்த வேட்பாளர் யார் என்பது குறித்து திலித் ஜயவீர எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button