துபாய் பந்தய களத்தில் சீறிப்பாயந்த அஜித்; தீயாய் பரவும் காணொளி
நடிகர் அஜித் குமார் துபாய் பந்தயகளத்தில் கார் ஓட்டிய காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.
கடந்த ஜூன் 21 ஆம் திகதி இந்த காணொளி எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
காணொளியில் கார்களை உற்று நோக்கும் அஜித், பிறகு அதனை களத்தில் வைத்து வேகமாக ஓட்டிய காட்சி பதிவாகிள்ளது.
முதலில் பி.எம்.டபிள்யூ. காரை ஓட்டி மகிழ்ந்த அஜித்குமார் அடுத்ததாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்தார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பி.எம்.டபிள்யூ. காரில் பந்தய களத்தை வலம்வந்தார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
![]()